உள்ளடக்கத்துக்குச் செல்

ரேண்டி ஆர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராண்டல் கெய்த் ஆர்டன் (Randal Keith Orton ( பிறப்பு: ஏப்ரல் 1, 1980) என்பவர் ஓர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் பகுதிநேர நடிகர்.  இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி அதில் உள்ள சுமாக்டவுன் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.[1]

ஆர்டன் இவர்களின் வம்சாவளியில்  இருந்து வந்த மூன்றாம் தலைமுறை மற்போர் வீரர் ஆவார். இதற்கு முன்பாக பாப் ஆர்டன் , கவ்பாய் பாப் ஆர்டன் மற்றும் அவரது மாமா பேரி ஆர்டன் ஆகியோர் இதற்கு முன்பாக தொழில்முறை குத்துச் சண்டையில் கலந்து கொண்டுள்ளனர்.[2] தொழில்முறை மற்போரில் கலந்துகொள்வதற்கு முன்பாக இவர் மத்திய மிசோரியில் உள்ள மற்போர் கழகத்தில் ஒரு மாதம் மற்போர் பயிற்சியில் ஈடுபட்டார். பின்பு ஓஹியோ வேலி ரெஸ்லிங்கில் கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று இருமுறை வாகையாளர் பட்டம் பெற்றார்.

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஒப்பந்தமான சில காலத்தில் இவர் டிரிபிள் எச், ரிக் பிளயர் ஆகியோர்  அடங்கிய இவோல்யூசனில்  ஒருவராகி கண்டங்களுக்கிடையேயான வாகை (இண்டர் காண்டிநண்டல் சாம்பியன்சிப் ) பட்டம் பெற்றார்.அது அந்த நிறுவனத்தில் அவர் பெற்ற முதல் வாகையாகும். மேலும் மற்போரில் புகழ்பெற்ற முன்னாள் வீரர்களைத் தாக்கியதன் மூலம் இவர் லெஜண்ட் கில்லர்  எனும் புனைப் பெயர் இவருக்கு கிடைத்தது. கிறிஸ் பென்வா என்பவருக்கு எதிரான உலக மற்போர் வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 24. இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் இந்தப் பட்டம் பெற்ற வீரரானார். 2008 ஆம் ஆண்டில் கோடி ரோட்ஸ் மற்றும் டெட் டிபியஸ் ஆகியோர் அடங்கிய தெ லெகசி  எனும் குழுவைத் துவங்கினார். பின் 2010 ஆம் ஆண்டில் அந்த கலைந்த பின் மீண்டும் ஒற்றையர் போட்டிகளில் 2013 முதல் 2015 வரை டிரிபிள் எச்சுடன் இணைந்து தி அத்தாரிட்டி என அறியப்பட்டார். அப்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துன் முகமாக அறியப்பட்டார். பின் வியாட் பேமிலியுடன் இணைந்து ஒட்டு வாகையாளர் பட்டம் பெற்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய வாகையாளர் பட்டத்தினை முதல் முறையாக வென்றார். ஆர்டன் ஒன்பது முறை உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினையும் நான்கு முறை உலக மிகு எடை வாகையாளர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில் டேபில்ஸ் லேடர்ஸ் மற்றும் சேர்ஸ் நிகழ்ச்சியில் ஆன் சீனாவினை வீழ்த்தி மீண்டும் உலக மற்போர் வாகையாளர் ஆனார்.

மேலும் டிரிபிள் எச் , ரிக் பிளயர் மற்றும் ஜான் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக முறை உலக மற்போர் வாகையாளர் பெற்றவராவார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற மணி இன் தெ பேங்க், 2019 மற்றும் 2017 இல் நடைபெற்ற ராயல் ரம்பிள் போட்டிகளில் வென்றுள்ளார். ரெசில்மேனியாவின் 24 மற்றும் 30ஆம் ஆண்டுகள் நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் முக்கிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ராண்டல் கெய்த் ஆர்டன் ஏப்ரல் 1, 1980 இல் நாக்ஸ்வைல், டென்ன்சில் பிறந்தார். இவரின் தாய் எலைன் தந்தை பாப் ஆர்டன் ஒரு முன்னாள் தொழில்முறை மற்போர் வீரர் பாப் ஆர்டன் ஜூனியர் ஆவார். இவர் பாப் ஆர்டரின் பேரன் ஆவார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Randy Orton bio". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் April 26, 2011.
  2. Oliver, Greg (2007). The Pro Wrestling Hall of Fame: The Heels. ECW Press. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55022-759-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேண்டி_ஆர்டன்&oldid=3583641" இலிருந்து மீள்விக்கப்பட்டது